கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் அருவருக்கத்தக்க வகையில் பாலியல் தொல்லை.. எரிமலையாய் வெடிக்கும் ராமதாஸ்

By vinoth kumarFirst Published May 24, 2021, 4:33 PM IST
Highlights

மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்  அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார். 

கொரோனா தொற்றின் 2ம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் அதிகளவில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கே.கே.நகரிலுள்ள பிஎஸ்பிபி தனியார் பள்ளியின் முதல்வருக்கு, முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ராஜகோபாலன் என்பவர், ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை ஆசிரியரைப் பள்ளியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களை வெளிப்படுத்த விரும்பாத நிலையில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்த பிரச்சினையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு கனிமொழி, ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!(1/2)

— Dr S RAMADOSS (@drramadoss)

 

மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்  அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

click me!