அரை நிர்வாணத்தில் ஆன்லைனில் அட்டூழியம்.. வெளிச்சத்துக்கு வந்த ஆசிரியரின் லீலைகள்.. கொதிக்கும் கனிமொழி..!

Published : May 24, 2021, 03:28 PM ISTUpdated : May 24, 2021, 03:40 PM IST
அரை நிர்வாணத்தில் ஆன்லைனில் அட்டூழியம்.. வெளிச்சத்துக்கு வந்த ஆசிரியரின் லீலைகள்.. கொதிக்கும் கனிமொழி..!

சுருக்கம்

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்த செய்த ஆசிரியர் மீதும், கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்த செய்த ஆசிரியர் மீதும், கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கேகே நகரிலுள்ள பிஎஸ்பிபி தனியார் பள்ளியின் முதல்வருக்கு, முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ராஜகோபாலன் என்பவர், ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை ஆசிரியரைப் பள்ளியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களை வெளிப்படுத்த விரும்பாத நிலையில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்த பிரச்சினையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து  திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ”சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை