ஒருவார காலத்திற்குள் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100படுக்கை வசதிகள் கொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்துள்ளார்.
ஒருவார காலத்திற்குள் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100படுக்கை வசதிகள் கொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் 2ஆம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதோடு, சுமார் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தும் வருகின்றனர்.
undefined
அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்காலிகமாக கொரோனா தடுப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 100கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அண்ணாநகர் புறநகர் மருத்துவமனை, வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் அமைய இருக்கும் கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளையும் அவர் பார்வையிட்டார்.