மேடைகள் தோறும் அதிரடியை அவிழ்த்துவிடும் தமிழக அமைச்சர்... இந்த தடவை என்ன தெரியுமா?

Published : Oct 09, 2018, 10:22 AM IST
மேடைகள் தோறும் அதிரடியை அவிழ்த்துவிடும் தமிழக அமைச்சர்... இந்த தடவை என்ன தெரியுமா?

சுருக்கம்

ஆண்டிற்கு 11 மாதங்கள் புரட்டாசியாகவே இருந்தால் வனத்தில் உள்ள அனைத்து விலங்குகளும் ஆபத்தில்லாமல் பாதுகாப்புடன் இருக்கும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆண்டிற்கு 11 மாதங்கள் புரட்டாசியாகவே இருந்தால் வனத்தில் உள்ள அனைத்து விலங்குகளும் ஆபத்தில்லாமல் பாதுகாப்புடன் இருக்கும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற வனஉயிரின வார விழாவில் பங்கேற்ற அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆண்டிற்கு 11 மாதங்கள் புரட்டாசி மாதங்களாகவே இருந்துவிட்டால் வனத்தில் உள்ள விலங்குகள் ஆபத்தில்லாமல் இருக்கும் என்றார். 

பொதுவாக பெருமளவில் வனவிலங்குகளை மக்கள் அடித்து உன்பதைப்போல், அமைச்சர் கூறிய கருத்து பலரையும் சிரிக்க வைத்தது. தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம்போல இந்த கூட்டதிலும் பழமொழியை மாற்றிக்கூறினார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனனை பாராட்டி பேசிய சீனிவாசன் மூர்த்தி சிறியது... கீர்த்தி பெரியது என்பதற்கு பதிலாக கீர்த்தி சிறியது... மூர்த்தி பெரியது என கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார். 

ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது பேச்சால் பல்வேறு சலசலப்புகளில் சிக்கியவர். யானை இருந்தாலும் ஆயிரம்பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதற்கு பதிலாக யானை எழுந்தாலும் ஆயிரம் பொன்... படுத்தாலும் ஆயிரம் என மிரளவைத்தார். 

ஏற்கனவே டெல்லி சென்று பிரதமர் நரசிம்ம ராவிடம் பேசுவார் என்று கூறினார். பிறகு  பிரதமர் மோடி என்று சொல்வதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்றும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர் என்று பேசி சர்ச்சைக்கு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அமைச்சர்கள் சரச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!