ரயில் முன் பாய்ந்த போராட்டக்காரர்! பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்! அதிர்ச்சியில் உறைந்த வைகோ!

 
Published : Jan 28, 2018, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
ரயில் முன் பாய்ந்த போராட்டக்காரர்! பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்! அதிர்ச்சியில் உறைந்த வைகோ!

சுருக்கம்

Protester fired before the train! Vaiko in shock!

ரயில் முன் பாய்ந்த ஒருவரை, போலீசார் ஒருவர் பாய்ந்து காப்பாற்றிய சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

கர்நாடக அரசிடம் இருந்து மத்திய - மாநில அரசுகள் காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களும், திமுக, மதிமுக, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தஞ்சையில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ரயில் மறியல் போராட்டத்தை அடுத்து, இன்று காலை முதலே ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். காலை 9.30 மணிக்கு வந்த வைகோவை, காவல் துறை அதிகாரிகள் ரயில் நிலையம் ள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் ரயிலை மறிக்க விடமாட்டோம் என்றும் வைகோவிடம் கூறினர். ரயில் நிலையம் வெளியே இருந்து கோஷம் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்றும் போலீசார்கூறியுள்ளனர்.

இதற்கு வைகோ, உள்ளே விடாவிட்டால், தடுப்புகளை மீறி நாங்கள் ரயிலை மறிப்போம் என வைகோ தரப்பில் சொல்லப்பட்டது. இதன் பின்னர், காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும், போராட்ட குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ரயிலை மறித்து கோஷம் போட்டுவிட்டு பின் எந்த இடையூறும் செய்யாமல் கைதாக வேண்டும் என்ற நிபந்தனை விதித்தனர். 

நிபந்தனைக்கு சம்மதித்த வைகோ உள்ளிட்டவர்கள் ரயில் நிலையம் சென்றனர். பின்னர், தண்டவாளத்தில் அமர்ந்து சோழன் விரைவு ரயிலை மறித்து கோஷங்கள் எழுப்பினர்.  தமிழக முதலமைச்சருக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதன் பின், வைகோ தொண்டர்களிடம், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். போராட்டக்காரர்களை கைது செய்யவும் போலீசார் தயாராகினர். சோழன் விரைவு ரயிலும், பிளாட்பாரத்தில் இருந்து லேசாக நகர ஆரம்பித்தது.

இந்த நிலையில், மதிமுக தொண்டர் ஒருவர், தன் கட்சி கொடியை ஏந்தியவாறு ரயில் முன் பாய்ந்து மறிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் ஒருவர், அவரைத் தாவிப்பிடித்தார். அப்போது இருவரும் தடுமாறி பக்கவாட்டில் கீழே விழுந்தனர். 

இதனைப் பார்த்த கைவோ உள்ளிட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் ஒருவரின் செயல்பட்டால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி போராட்டம் முடிந்தது. போராட்டக்காரரை காப்பாற்றிய போலீசாரை அனைவரும் பாராட்டினர்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!