திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடத்தப்படும்! விஜயகாந்த்

 
Published : Jan 28, 2018, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடத்தப்படும்! விஜயகாந்த்

சுருக்கம்

Tomorrow will be organized as planned! Vijayakanth

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை அரசு இரு மடங்காக உயர்த்தியது. பேருந்து கட்டண உயர்வுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக, கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்கட்சிகளும், போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நாளை தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து விஜயகாந்த் கூறும்போது, பேருந்து கட்டணத்தை குறைத்துவிட்டதுபோல் அரசு நாகடம் ஆடுவதை கண்டிக்கிறேன். போக்குவரத்து துறையில் நிர்வாக சீர்கேட்டை சரி செய்தாலே நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!