ஆளுநர் மாளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து... கண்டன பொதுக்கூட்டமாக நடத்த திமுக கூட்டணி முடிவு!!

By Narendran S  |  First Published Apr 10, 2023, 11:52 PM IST

ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெறும் என திமுக கூட்டணி அறிவித்துள்ளது. 


ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெறும் என திமுக கூட்டணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வருகிற 12-04-2023  அன்று ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் ஏற்கனவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் வெளிநாட்டு தொடர்பு.. அம்பலப்படுத்திய குலாம் நபி ஆசாத் - கையில் எடுத்த பாஜக.!!

Tap to resize

Latest Videos

இன்று (10.4.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்நிலையில், இன்று பிற்பகல் தமிழ்நாடு ஆளுநர், ஆன்லைன் மீதான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

இதையும் படிங்க: அடுத்தடுத்த அழுத்தம்.. ஒருவழியாக ஒப்புதல் கொடுத்த ஆளுநர்..சாதித்த முதல்வர் - என்ன தான் நடந்தது.?

எனினும், இன்னும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநரின் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் - விளக்கமும் அளிக்காத காரணத்தினால், 12-04-2023 அன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே 12-4-2023 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில்,  சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!