
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் என்னை பார்த்தால் இந்த சூழலில் தூத்துக்குடி மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
காயமடைந்தவர்களில் மூன்று பேருக்கு தலா ரூ.10000 நிதி உதவி அளிக்கியுள்ளார். இறந்தவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
காயமுற்றவர்களை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தமிழக புலனாய்வு துறை தவறால்தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. தமிழகம் போராட்ட பூமியாக மாறக்கூடாது. போராட்ட களமாக தமிழகம் இருந்தால் முதலீட்டாளர்கள் தொழில் பாதிக்கப்படுமென கருதி தமிழகம் வரமாட்டார்கள் எனக் கூறினார். பிரச்சனைக்கு தீர்வுகாண போராட்டம் மட்டும் வழிகிடையாது எனக்கூறியுள்ளார். விஷமிகள் புகுந்து நாசக்கார வேலைகளை செய்துள்ளனர் என்று அரசின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் விதமாக கூறினார் ரஜினிகாந்த்
மக்களின் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக ரஜினியின் பேச்சு உள்ளது என தமிமுன் அன்சாரி கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சை மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்
சமூக விரோதிகள் ஊடுருவியதாக மக்கள் போராட்டத்தில் கல் வீசியுள்ளன்ர் அதனால் தான் இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது. மக்கள் போராட்டம் போராட்டமென போனால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.