இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், திமுக எம்.பி., டி.ஆர் பாலுவிடம் அளித்த வாக்குறுதி..!

Published : Aug 11, 2020, 01:11 PM IST
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், திமுக எம்.பி., டி.ஆர் பாலுவிடம் அளித்த வாக்குறுதி..!

சுருக்கம்

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடல்களை தமிழகத்திற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி. ஆர்.பாலு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.  

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடல்களை தமிழகத்திற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி. ஆர்.பாலு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

ரஷ்யாவின், வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவ படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வால்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உயிரிழந்த, தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

மேலும், திரு. டி ஆர். பாலு அவர்கள் எழுதிய மற்றுமொரு கடிதத்தில், சென்னை கொளுத்துவஞ்சேரியைச் சேர்ந்த ஆர். சந்தோஷ் குமார், மலேசியாவில் நுழைவு விசா முடிவுற்ற காரணத்தால், கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தாயகம் திரும்ப ஆவன செய்ய வேண்டுமெனவும் வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவன செய்வதாகவும், ஆர். சந்தோஷ் குமார் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், டி.ஆர் பாலு அவர்களிடம் உறுதி அளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?