வாக்களிக்க போகும் போது செல்போன் எடுத்து செல்ல தடை? சத்யபிரதா சாகு அதிரடி..!

By vinoth kumarFirst Published Apr 5, 2021, 12:48 PM IST
Highlights

 பூத் சிலிப் கொடுப்பது, நமக்கு எந்த வாக்குச் சாவடியில் வாக்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான். பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடி இதுதான் என் தெரிந்தால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுத்து வாக்களிக்கலாம்.

ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள், 'மொபைல் போன்களை' எடுத்து செல்லக் கூடாது என  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சத்யபிரதா சாகு;-  பூத் சிலிப் கொடுப்பது, நமக்கு எந்த வாக்குச் சாவடியில் வாக்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான். பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடி இதுதான் என் தெரிந்தால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுத்து வாக்களிக்கலாம்.

ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தலைமைச் செயலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 'வெப் கேமரா' பொருத்தப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி அலுவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது, மொபைல் போன்களை எடுத்து செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணில் மாவட்ட அளவிலான தேர்தல் அலுவலர்களையும் 180042521950 என்ற எண்ணில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். சி விஜில் செல்போன் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்புடைய பணம் மற்றும் பொரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

click me!