கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அறையில் வருமானவரித்துறை சோதனை.. கொதிக்கும் முத்தரசன்..

By Ezhilarasan BabuFirst Published Apr 5, 2021, 12:28 PM IST
Highlights

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மகேந்திரன் தங்கி இருந்த அறையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மகேந்திரன் தங்கி இருந்த அறையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், தளி தொகுதிக்கான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் இராமச்சந்திரனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வந்தார். தளியில் உள்ள சிட்டி விடுதியில் தங்கி பரப்புரையை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் நள்ளிரவில் ( 03/04/2021) ,அவர் தங்கி இருந்த விடுதியின் அறைக்குள் ,அத்து மீறி புகுந்து பத்துக்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகளும்,  

மத்திய துணைநிலை இராணுவப் படையினரும் சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறை  மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பில் உள்ள ஒரு தலைவரின் அறையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அத்துமீறி அடாவடித்தனமாக சோதனை செய்ததை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக 
கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!