எந்நாளும் அதிகாரத்தின் உச்சியில் இருக்க முடியாது... அதிமுக பிரமுகருக்கு ஆப்பு..!

Published : Apr 05, 2021, 12:08 PM IST
எந்நாளும் அதிகாரத்தின் உச்சியில் இருக்க முடியாது... அதிமுக பிரமுகருக்கு ஆப்பு..!

சுருக்கம்

எந்நாளும் அதிகாரத்தின் உச்சியில் இருக்க முடியாது. வாழ்க்கை சக்கரம் சுழலும் தம்பி’’ என அவரது கட்சி நிர்வாகிகளே கமெண்ட் அடிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது

கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, வடவள்ளியை சேர்ந்த ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் மீது வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகியும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான வடவள்ளி சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் உட்பட இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அவர், கைது செய்யப்படவில்லை. இருந்தாலும் அவர், கைது நடவடிக்கைக்கு பயந்து, தலைமறைவாகி விட்டார். வாக்குப்பதிவு நிறைவுபெற்று, நிலைமை சீரான பிறகுதான் ஏரியாவுக்குள் தலைகாட்டுவேன் என்ற சபதத்துடன் அவர், தலைமறைவாக உள்ளார். இதற்கிடையில், அவர், தனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை, வாய்ப்பு தரவில்லையே என்ற ஏக்கத்திலும் அவர் இருக்கிறாராம்.

அதனால், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, ஒரு இடத்துக்குக்கூட போகவில்லை. இதன்மூலம், கட்சிக்குள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். ஒரு பக்கம் போலீஸ் நெருக்கடி, இன்னொரு பக்கம் கட்சிக்குள் புகைச்சல் என மண்டைக்குடைச்சல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், விழி பிதுங்கி நிற்கிறார். ‘’எந்நாளும் அதிகாரத்தின் உச்சியில் இருக்க முடியாது. வாழ்க்கை சக்கரம் சுழலும் தம்பி’’ என அவரது கட்சி நிர்வாகிகளே கமெண்ட் அடிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது’’ என்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!