வாக்குக்கு ரூ.200 முதல் ரூ.2000 வரை..! மாவட்ட வாரியாக படு ஜோர் பட்டுவாடா?

By Selva KathirFirst Published Apr 5, 2021, 11:53 AM IST
Highlights

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு தலா ரூ.200 முதல் ரூ.2000 வரை விநியோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு தலா ரூ.200 முதல் ரூ.2000 வரை விநியோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய தொகுதிகளில் அனைத்திலுமே வாக்காளர்களுக்கு தலா ரூ.2000 வரை விநியோகம் செய்யப்படுகிறது .அதே சமம் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மதுரவாயல் தொகுதியை பொறுத்தவரை கூகுள் பே, போன் போ என நவீன தொழில்நுட்பங்கள் முலம் வாக்காளங்களுக்கு கடந்த ஒரு வாரமாகவே தலா 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டு வருகிறதாம். சென்னை ஆவடி, அம்பத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு தலா 1000 ரூபாய் என ரேட் பிக்ஸ் செய்துள்ளனராம்.

விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை என வட மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு தலா ரூபாய் 200 கொடுக்கு முடிவாகி பட்டுவாடா நேற்று முதல் படு ஜோராக நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். திருச்சி மாநகருக்குள் வரும் தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் கொடுக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெறுவதாக சொல்கிறார்கள். திருச்சியை சுற்றி உள்ள தொகுதிகளில் வாக்காளர்களுக்கு தலா ரூ.200 என விநியோகம் நடைபெற்று வருகிறதாம்.

மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் வாக்குகக்கு தலா 2000 ரூபாய் என அங்கு பண மழை பொழிவதாக கூறுகிறார்கள். இதே போல் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓட்டுக்கு 200 ரூபாயை தாண்டி எந்த வேட்பாளரும் இறக்கவில்லை என்கிறார்கள். மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு தலா 200 ரூபாய் என்று திட்டமிட்டு பட்டுவாடா செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தல்களை போல் அல்லாமல இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை கெடுபிடி மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் கடந்த முறையை போல் வீடு வீடாக சென்று கொடுத்து முடிப்பது என்பது இயலாத காரியம் என்று அரசியல் கட்சியினர் முடிவுக்கு வந்துள்ளனர். எனவே ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு செய்த பார்முலா படி டோக்கன் விநியோகம் நடைபெறுகிறது. அந்த டோக்கனுடன் சென்று வாக்களித்துவிட்டு வந்து மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளும் வகையில் பல தொகுதிகளில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

click me!