மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் வைகோவுக்கு மீண்டும் சிக்கல் !! வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்.பி.புகார் !!

By Selvanayagam PFirst Published Jul 10, 2019, 10:17 PM IST
Highlights

தேச துரோக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வைகோவை , இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக பணியாற்ற அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் எனவே அவரை அனுமதிக்கக் கூடாது அதிமுக எம்.பி.சசிகலா வெங்கையா நாயுடுவிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்பு மனு ஒருவேளை நிராகரிக்கப்படக் கூடுமோ என்ற சந்தேகம் நிலவியதால், திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இன்று காலை தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் வைகோ ராஜ்யசபாவுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று மாலை முதல் டெல்லியில் இருந்து வேறு ஒரு தகவல் கிடைக்கிறது.


அதாவது, இப்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுக ராஜ்யசபா உறுப்பினரான சசிகலா புஷ்பா, வைகோவுக்கு எதிராக ராஜ்யசபா தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் ஒரு புகார் மனுவை அளிக்கத் தயாராகிவருகிறார்.

அதாவது, “வைகோ மீதான தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வேண்டுமானால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கலாம். ஆனால் தேச துரோக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரை, இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக பணியாற்ற அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். 

இந்தியா முழுதும் இளைஞர்களுக்கு இது வேறுமாதிரியான செய்தியை சொல்வதாக அமைந்துவிடும். எனவே வைகோவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது” என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்க சசிகலா புஷ்பா. தயாராகி வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

click me!