அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக அதாவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 4500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்ட நிலையில், கட்சி விரோத போக்கில் ஓபிஎஸ் ஈடுபட்டதாக கூறி அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. ஆஜராகப்போகும் மருது அழகுராஜ்.. புதிய தகவல் வெளியாக வாய்ப்பு .!
ஓபிஎஸ்யை சந்தித்த நிர்வாகிகள்
இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேனிக்கு சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓ.பி.எஸ்-ஸால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவநாராயனசாமி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்க முத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி ஆகியோர் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நெல்லை, தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் ஓபிஎஸ்யை சந்திக்க வந்து இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூறுகையில், சட்டப்படி 2026ஆம் ஆண்டு வரை ஓ.பி.எஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். 2017ஆம் ஆண்டு பொதுக்குழு விதிப்படி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, அதை நீக்கவும் முடியாது, இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும் உருவாக்க முடியாது என்றனர்.
'எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள்'
மேலும் அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ்-ன் பக்கம் தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியிடம் நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். தன்னிடம் கட்சியும், இரட்டை இலை சின்னமும் இருப்பதாக சொல்லி மக்களையும், தொண்டர்களையும் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். உண்மையிலேயே எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி உள்பட 63அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யட்டும், அப்போது இடைத்தேர்தல் வரும் போது கட்சியும், சின்னமும் யாரிடம் இருக்கிறது என்பது தெரியவரும். மேலும் தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஓருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்- வால் நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு திராணி இருந்தால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா என்று கேள்வி எழுப்பினர்.
மாநில சுயாட்சியும்... கொள்கையில் மாறாத, மானமிகு கருணாநிதியும்..!!