விமர்சிக்க நூறு காரணங்கள்.. புகழ ஆயிரம் காரணங்களை தன்னகத்தே கொண்ட சூரியன்.. கருணாநிதி.

By Ajmal Khan  |  First Published Aug 7, 2022, 7:40 AM IST

எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத தனிப் பண்பு அவர் ஒருவரிடம் மட்டுமே இருந்தது, விமர்சனத்தையும் புகழையும் ஒரே நேரத்தில் தன் கழுத்தில் விழுந்த மாலை ஆகவே மாற்றத் தெரிந்த மாமேதை கருணாநிதி,


மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழும் மகத்தான தலைவர்களை தகுந்த நேரத்தில் காலம் நமக்கு கொடுக்க தவறியதில்லை, அப்படி காலத்தின் கொடையாக வந்து அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆண்டு மக்கள் மனதில் சிங்காசனம் வீற்று அமர்ந்திருக்கும்ம்  மகத்தான தலைவர்களில் ஒருவர்தான் தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி.

இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல்வாதி.. அரசியல் சாணக்கியர்  என்று பல பெயர்கள் அவருக்கு உண்டு. எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத தனிப் பண்பு அவர் ஒருவரிடம் மட்டுமே இருந்தது. விமர்சனத்தையும் புகழையும் ஒரே நேரத்தில் தன் கழுத்தில் விழுந்த மாலையாகவே மாற்றத் தெரிந்த வித்தைக் காரர் கருணாநிதி, ஒவ்வொரு துறையிலும் முழுமையான அறிவு, நுட்பமும் திறமையும் வாய்க்கப்பெற்ற வல்லவர், அதனால்தான் 1976இல் ஆட்சியை இழந்தும் அடுத்த 13 வருடங்கள் திமுக என்னும் மாபெரும் இயக்கத்தை தொய்வில்லாமல் அவரால் கட்டிக்காக்க முடிந்தது.

Tap to resize

Latest Videos

கலைஞர் கருணாநிதி செய்த சாதனைகளைப் பட்டியலிட்டால் அது பெரும் தொடராகவே நீளும்,கலைஞர் எல்லாத் துறைகளிலும் வல்லவர். அவர் தொடாத, சிந்திக்காத துறைகளே இல்லை, அவர் பேசாத சமூகநீதி இல்லை, அவருக்கு நேராத அவமானங்கள் இல்லை, அவர் எதிர்கொள்ளாத சவால்களே இல்லை, அவர் சந்திக்காத துரோகங்களே இல்லை என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இன்னும் பலர் யார் கருணாநிதி, அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதிலை நாம் சொல்லலாம்

அவரை விமர்சிக்க நூறு காரணங்கள் சொல்லலாம் ஆனால் அவரை புகழ ஆயிரம் காரணங்களை தன்னகத்தே கொண்ட தலைவர் கருணாநிதி, அவர் சிந்தனைகள் இன்று சமத்துவ மிக்க சமுதாயத்தை கட்டி எழுப்பி உள்ளது, அவரின் கற்பனைகள் தமிழகத்தை சர்வதேச நாடுகளுக்கு இணையாக நிறுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

மொத்தமாக ஒழிச்சு கட்ட பிளான் போட்ட ஸ்டாலின்..! அதிமுக, பாஜக எம்ஏல்ஏக்களுக்கு பகிரங்க அழைப்பு..

காலம் பேசும் கருணாநிதி திட்டம்...

கலைஞர் கருணாநிதி என்றால் சமூகநீதியும், பெண்ணுரிமைக்கும் அதிக ஈடுபாடு காட்டிய தலைவர் ஆவார். 1929 செங்கல்பட்டில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, கருணாநிதிக்கு ஐந்து வயது தான் இருக்கும், ஆனால் தனது 65வது வயதில்  சட்டமன்றத்தில் அதைத் தீர்மானமாக கொண்டு வந்து அதை சட்டம் ஆக்கினார். அதேபோல் இட ஒதுக்கீடு கருத்தையும் இரண்டாவது முறையாக முதல்வரான போது இந்தியாவுக்கே முன்னோடியாக பிற்படுத்தப்பட்ட நலத்துறை என்ற அமைச்சரவையை உருவாக்கி சமூக நீதியை  நிலைநாட்டியவர் அவர்

குமரி மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை தேவை... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

.

முதல்வர் ஆனவுடன் மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்ஷா திட்டம்,

 விவசாயிகளுக்கு நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம்,

 பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம், ஆதிதிராவிடர் இலவச வீடுகள் திட்டம், பார்வை இழந்தவருக்கு இலவச கண்ணொளி திட்டம், துப்புரவு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டம்,

 2009ஆம் ஆண்டு கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம்.

இளைஞர்களின் அறிவை பட்டை தீட்டும் அண்ணா பொது நூலகம்

, டைடல் பார்க் அறிவியல் தொழிற்பூங்கா, விவசாயிகளுக்கு உழவர் சந்தை,

 அனைத்து சாதியினரும் ஒரே வீதியில் வாழு வைக்கும் சமத்துவபுரம் திட்டம், 

ஏழை எளிய மக்களுக்கு 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்,

 ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி திட்டம்,

 பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம்,

 தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து

, சென்னை, மதுரை, கோவை என பெரு நகரங்களில் மேம்பாலம் திட்டம்,

 முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முப்பால் வார்த்து தந்த வள்ளுவனுக்கு 133 அடியில் சிலை

,  தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து,

 பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி அமைச்சரவை என்னத்த இன்னும் இன்னும் பல திட்டங்களை வகுத்துத் தந்தவர் கருணாநிதி.
 

இதையும் படியுங்கள்

மாநில சுயாட்சியும்... கொள்கையில் மாறாத, மானமிகு கருணாநிதியும்..!!

 

click me!