பிரதமர் மோடியை எதிர்த்து இதற்காகத்தான் பிரியங்கா போட்டியிடவில்லையாம் ! வெளியான புதுத் தகவல் !!

By Selvanayagam PFirst Published Apr 26, 2019, 7:40 PM IST
Highlights

அமேதி மற்றும் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என்றும் அதில் வயநாடு தொகுதியை மட்டும் வைத்துக் கொண்டு அமேதியை ராஜினாமா செய்வார் என்றும் அந்தத் தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்பதால்தான்  அவர் வாரணாசியில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுட்டுள்ளது.
 

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை  எதிர்த்து பிரியங்கா போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. அங்கு  போட்டியிடச் சொல்லி தலைமை உத்தரவிட்டால் நான் போட்டியிடத் தயார்’ என்றும் பிரியங்கா  அறிவித்தார்.
 
இந்நிலையில் நேற்று மோடி காசியில் பிரம்மாண்டமான பேரணியை நடத்திக் கொண்டிருந்த நிலையில் காசி தொகுதிக்கான வேட்பாளர் அஜய் ராய் என்பதை அறிவித்துள்ளது காங்கிரஸ். அதாவது மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை.

ஆனால் பிரியங்கா வாராணாசியில் போட்டியிடாததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஒருவேளை பிரியங்காவை மோடிக்கு எதிராக நிறுத்தி அவர் வெற்றிவாய்ப்பை இழக்கும் பட்சத்தில் நேரு குடும்ப வரலாற்றில் தேர்தலில் தோற்றவர் என்ற சரித்திரம் எழுதப்படும். இதை ராகுல் விரும்பவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே கடும் நெருக்கடியை பிரியங்கா சந்திப்பதையும் ராகுல் விரும்பவில்லை என்று காரணம் கூறப்படுகிறது..
இந்நிலையில் தான் ராகுல்  தான் போட்டியிடும் அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளின் வெற்றிக்குப் பின் கேரளாவின் வயநாட்டை மட்டும் வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் .

தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமேதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்வார். பின் அமேதியில் பிரியங்காவை களமிறக்கி அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார் ராகுல் என்கிறார்கள் . இந்த காரணங்களுக்காத் தான் பிரியங்கா வாராணாசியில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.

click me!