
எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கு பிறந்த மகள் நான் என பிரியா மகாலட்சுமி என்ற பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். இவர் படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஏழைகளின் வாழ்வில் இறக்கம் கொண்டவர் என்பதாலேயே மக்கள் திலகம் என்ற மகுடம் அவருக்கு கிடைத்ததாக அவரது பக்தர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரின் வழியில் பயணித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூறலாம். இதை ஜெயலலிதா இறந்தபோது அவர் சமாதியை பார்க்க வந்த கூட்டத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் 28 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். 1965 ல் எம்.ஜி.ஆரோடு சினிமா பயணத்தில் காலடி எடுத்து வைத்தார் ஜெயலலிதா.
இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன் கன்னித்தாய், சந்ரோதயம், முகராசி, காவல்காரன், அரசகட்டளை, குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, அடிமை பெண் உள்ளிட்ட அடுத்தடுத்து இணைந்து நடித்தனர்.
1973 ல் பட்டிகாட்டு பொன்னையா படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் அடுத்து ஒரு வாரத்திலேயே அதிமுக வை துவங்கினார்.
இதையடுத்து பத்து ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகபடுத்தினார் எம்.ஜி.ஆர். மேலும் கொள்கை பரப்பு செயலாளராகவும் ஆக்கினார்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் நீடித்தார்.
பின்னர், எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றி மக்கள் வரவேற்பை பெற்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது உடல் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
ஜெ மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதல்வராகவும் தேர்வு செய்யபட்டார்.
பின்னர், சசிகலா முதல்வராக முயற்சி மேற்கொண்டதையடுத்து ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில், அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இது போதாது என்று தற்போது புதிதாக ஒரு புயல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
எம்.ஜி.ஆர் தனது தந்தை எனவும், ஜெயலலிதா தனது தாய் எனவும் பிரியா மகாலட்சுமி என்ற பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், மேகதாது அணை, ஓ.பி.எஸ் போர்க்கொடி, தற்போது ஜெயலலிதா எம்.ஜி.ஆர் மகள் என மக்களை எப்பொழுதும் ஒரு பரபரப்பிலேயே வைத்துள்ளதாக நெட்டிசன்கள் மீம்ஸ் அடித்து வருகின்றனர்.