"எம்எல்ஏ நடராஜ் முதலமைச்சராக வேண்டும்" - மார்க்கண்டேய கட்ஜூ தடாலடி

Asianet News Tamil  
Published : Mar 05, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
"எம்எல்ஏ நடராஜ் முதலமைச்சராக வேண்டும்" - மார்க்கண்டேய கட்ஜூ தடாலடி

சுருக்கம்

CM Edappadi Palanichany to resign his post Former IPS officer will take over as Chief Minister of RA Mylapore constituency AIADMK Markandeya Katju

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்வுமான ஆர்.நடராஜ் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் அதற்காக போராட வேண்டும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயே தன பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

தென் மாநிலத்தை சேர்ந்த அனைத்து பார் அசோசியேசன், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த வழக்கறிஞர்கள் நாளை முதல், அதாவது திங்கள்கிழமை முதல் தினந்தோறும் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். வழக்கறிஞர்களுக்கு தென்மாநில மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அனைவரும் கீழே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட வேண்டும்.

1) அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும்.

2) தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்.

3) தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரியும், நிர்வாகத் திறமை வாய்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.நடராஜ் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும்.

4) விஞ்ஞானிகளின் கருத்தை கேட்டு முடிவெடுக்கும் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நாளை முதல் கையில் வெள்ளை பேண்ட் அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும்.

 இவ்வாறு அவர், தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!