
தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு மீதான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது வைகோவை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் வைகோ தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.