மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

Published : Sep 15, 2020, 04:56 PM IST
மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை...  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

சுருக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளில் 10 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளில் 10 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளில் 10 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு இதன்மூலமாக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நடப்பு கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!