ஜூன் 14-ஆம் தேதி முதல் தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2021, 9:11 AM IST
Highlights

ஜூன் 14-ஆம் தேதி முதல் தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 

ஜூன் 14-ஆம் தேதி முதல் தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடல் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி  பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது, அதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது,  உயர் கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவது, உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்க உள்ளது,  அதேபோல் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான பாட திட்டமும் தொடங்க உள்ளது எனவே, ஜூன் 14-ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகள் நடைபெற உள்ளதாலும், மாணவர் சேர்க்கை  ஆரம்பிக்க உள்ளதாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, 

12ஆம் வகுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் நடக்க உள்ளன, மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் வழங்குவது, உயர்கல்விக்கான சான்றிதழ் வழங்குவது, மாணவர் சேர்க்கையை துவங்குவது, பாடத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பணிகள் உள்ளன. மேலும் பள்ளி வளாகம் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மாணவர்களை கல்வி தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது போன்ற பணிகள் உள்ளன. எனவே தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி 14ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!