மருமக இல்ல மக...! மருமகளுக்கும் தந்தையான பிரின்ஸ் சார்லஸ்

Asianet News Tamil  
Published : May 19, 2018, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
மருமக இல்ல மக...! மருமகளுக்கும் தந்தையான பிரின்ஸ் சார்லஸ்

சுருக்கம்

princess harry marriage

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதி யின் இளையமகன் ஹாரிக்கும் (33). மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் திருமணம் நடக்கிறது. திருமணத்தை யொட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை யொட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

மணமகள் மேகன் மார்கலுக்கு இளவரசர் சார்லஸ் அணிவிக்க இருக்கும் திருமண மோதிரத்தில் 3 வைரகற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 2 வைரகற்களும் ஹாரியின் தாயார் மறைந்த இளவரசி டயானாவுக்கு சொந்தமானது.

திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. ஆனால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகன் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.

திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு மைதானத்தில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி திருமண விழாவில் இந்தியர்கள் சார்பில் பங்கேற்க நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தவிர மும்பை குடிசை பகுதியை சேர்ந்த அர்ச்சனா அம்ரி (25), டெபோரா தாஸ் (31) ஆகிய 2 பெண்கள் பங்கேற்கிறார்கள்.

மருமகளுக்கும் தந்தையாக முன்னின்று இளவரசர் சார்லஸ் தன் மகன் திருமணத்தை நடத்தியது நாட்டு மக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!