
சென்னை தியாகராயநகரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தலைமையில் நடந்த விவசாயிகள் குரல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை குளங்களை தூர்வாற வேண்டும், சிறிய அணைகளை கட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்,தமிழகத்தில் புதிதாக சிற்றணை, தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த அலோசனை கூட்டத்திற்கு அனைத்து கட்சிக்கும் அழைப்பு கொடுக்கப் பட்டது. இந்த ஆலோசனை கூடத்தில் விவசாயி அய்யாகண்ணு, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர் .
மேலும் நடிகர் கமல் ஹாசன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து , இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வர அழைப்பு கொடுத்து இருந்தார்.மேலும் நடிகர் ரஜினிகாதுக்கும் போனில் அழைப்பு கொடுத்து இருந்தார்.
இவர்கள் இருவருமே நேரில் வரவில்லை..இது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நடிகர் கமல்..
"இந்த ஆலோசனை கூட்டம் குறித்த புரிதல் ஸ்டாலினுக்கு தெரிந்திருந்தால், அவர் இப்படி சொல்லி இருக்க மாட்டார்..வராமல் இருந்திருக்க மாட்டார் ...இந்த கூட்டமே முடிவு அல்ல...அடுத்த கூட்டத்தில் அவர் வரலாம் என தெரிவித்து உள்ளார்
ரஜினிகாந்தை பற்றி கேட்ட போது
" நீங்கள் அரசியல் கட்சி தொடங்கிவிட்டீங்க....நான் இன்னும் அரசியல் கட்சி துவங்காததால், கூட்டத்திற்கு வர இயலாது என ரஜினி தெரிவித்தார் என கூறி உள்ளார் கமல்
ஆனால் ரஜினி இந்த கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும் எனவும் கமல் தெரிவித்து உள்ளார்