எதிரிகளை நேசியுங்கள்...கட்சியைவிட நாடே முக்கியம்...!! பாஜக எம்பிக்களுக்கு போதனை வழங்கிய பிரதமர் மோடி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2020, 1:22 PM IST
Highlights

இந்நிலையில்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி கூடியது கடந்த மாதம் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது அந்த கூட்டத்தொடரில்  பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . 
 

எதிரிகளை முதலில் நேசிக்கத் தொடங்குங்கள் ,  கட்சியை விட நாடே முக்கியமானது என பாஜக எம்பிக்களுக்கு பாரதப் பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார் .  பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெற்றது ,  கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்ட ,  பிரதமர் மோடி ,  உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனர் .

 பாஜக எம்பிக்கள்  கட்சியைவிட  நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் கட்சியை விட நாடே முக்கியமானது என்பதை நமது எம்பிக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென மோடி  கூறினார் .  தொடர்ந்து பேசிய அவர் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாஜக எம்பிக்கள் நிலைநாட்ட வேண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு அமைதி ,  சமூக நல்லிணக்கம் ,  ஒருமைப்பாடு அவசியம் . என்றார். இந்நிலையில்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி கூடியது கடந்த மாதம் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது அந்த கூட்டத்தொடரில்  பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . 

இந்நிலையில் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது அப்போது  டெல்லி கலவரத்தை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ராஜினாமா செய்ய  கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர் இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்பிக்கள் குறிப்பாக கடைசி வரிசையில் இருந்த பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை முட்டி தள்ளினார் .  இதைத்  தொடர்ந்து ஆளும்கட்சி  மற்றும் எதிர்க் கட்சி எம்பிக்கள் மாறி மாறி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.   இதனால் அவையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார் . பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

 

 

click me!