ரஜனி கமல் இணைந்தால் , இன்னொரு பரட்டையும் சப்பானியும்தான் கிடைப்பார்கள்...!! அமைச்சர் தாறுமாறு விமர்சனம்...!!

Published : Mar 03, 2020, 12:53 PM IST
ரஜனி கமல் இணைந்தால் , இன்னொரு பரட்டையும் சப்பானியும்தான் கிடைப்பார்கள்...!! அமைச்சர்  தாறுமாறு விமர்சனம்...!!

சுருக்கம்

அதிமுகவின் ஓட்டு வங்கியை யாராலும் எதுவும் செய்ய முடியாது .  யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும் எங்களுக்கு அதில்  மாறுபட்ட கருத்து கிடையாது .    

ரஜினியும் கமலும் இணைந்தால் 16 வயதினிலே சினிமா படம்தான்  கிடைக்குமே தவிற  வேறு எதுவும் நடக்கப் போவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக நக்கலடித்துள்ளார்.  சினாமாவில் நேர் எதிர் துருவங்களாக ரஜனி கமல் இருந்தாலும் நட்பாக பழகு வருகின்றனர். இந்நிலையில் அரசியலிலும் அதே நட்பு தொடர்கிறது.   அந்நிலையில் அதிமுகவை கமல் விமர்சித்து வருவதுடன் ,  ரஜினியும் ஜெயல லிதாவுக்கு பின்னர் அதிமுகவில் வெற்றிடம் உள்ளது என பேசி வருகிறார், இது அதிமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. 

இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ரஜினி கமல் குறித்து கடுமையாக சாடியுள்ளார், அதாவது,   ரஜினி இன்னும் கட்சி தொடங்கவேயில்லை,   அவர் முதலில்  கட்சி தொடங்கட்டும் . ரஜினி கமலஹாசன் இணைந்து கூட்டணி அமைத்துக்கொண்டால் அதில் அதிமுகவுக்கு  எந்த கவலையும் இல்லை  . ஏனெனில் எங்களுடைய வாக்குவங்கி உறுதியானது  , அதிமுகவின் ஓட்டு வங்கியை யாராலும் எதுவும் செய்ய முடியாது .  யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும் எங்களுக்கு அதில்  மாறுபட்ட கருத்து கிடையாது .  

இதில்  நடிகர் ரஜினியும்  கமல்ஹாசனும் ,  இணைந்தால்,  இன்னொரு 16 வயதினிலே படம் போல் ஒரு நல்ல படம் நமக்கு கிடைக்குமே தவிர வேறு எதுவும் நடக்காது . ரஜினியை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்தது பெரியது அல்ல .  முஸ்லிம் தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை  மூன்று முறை சந்தித்து பேசியுள்ளனர் எனவே மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்று அவர்  தெளிவுபடக் கூறியுள்ளார் . ஆனால் முதல்வர் முஸ்லிம் தலைவர்களை சந்திக்க வில்லை என்று பலர் திசை திருப்புகின்றனர் இவ்வாறு விஜயகுமார் கூறினார் .

 

PREV
click me!

Recommended Stories

எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!
நாஞ்சில் சம்பத்தை குஷி படுத்திய விஜய்.. முக்கிய பொறுப்பு வழங்கி கௌரவிப்பு..!