வெட்கமில்லாமல் பேசுகிறார் அமித்ஷா... கலவரம் செய்ய பாஜக செய்கிறது சதி ... பாய்ந்து அடித்த மம்தா..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2020, 12:28 PM IST
Highlights

குஜராத்தில் நடத்திய கலவரத்தை போல மேற்குவங்கம்  உட்பட நாடு முழுவதும் கலவரத்தை தூண்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இந்நிலையில் மேற்கு வங்கத்தை கைப்பற்றுவோம் என வெட்கமில்லாமல் பாஜக பேசி வருகிறது

குஜராத் கலவரத்தை போல  டெல்லியையும் கலவர பூமியாக மாற்ற மத்திய அரசு சதி செய்கிறது என மம்தா பானர்ஜி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் .  டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள் என்றும் ,  இது மத்திய அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் மம்தா  பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் .  இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது .  இந்நிலையில் ஆங்காங்கே போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் டெல்லியில் இந்திய குடியுரிமை சட்ட ஆதரவு எதிர்ப்பு கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிந்தது இதில் 46 பேர் பலியாகியுள்ளனர் .

சுமார் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .  இந்நிலையில்  கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த இந்திய குடியுரிமை சட்டத்தை பாராட்டி நடைபெற்ற விழாவில்  பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூறியதாவது : -   சிஏஏவால் யாருடைய குடியுரிமையும் பாதிக்கப்படாது .  அதேபோல் மேற்குவங்கத்தில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமையும் என்றார் .  இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த திருணாமுல்  காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ,  டெல்லி கலவரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது .  இது மத்திய அரசின் திட்டமிட்ட சதி , இது ஒரை திட்டமிடப்பட்டஇனப்படுகொலையாகும் ,

  

இந்த வன்முறைக்கு பாஜக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் .  குஜராத்தில் நடத்திய கலவரத்தை போல மேற்குவங்கம்  உட்பட நாடு முழுவதும் கலவரத்தை தூண்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இந்நிலையில் மேற்கு வங்கத்தை கைப்பற்றுவோம் என வெட்கமில்லாமல் பாஜக பேசி வருகிறது .  கொல்கத்தாவில் நேற்று நடந்த கூட்டத்தில் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்  என கோஷம் போடப்பட்டது .  இவர்கள் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் டெல்லியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என  கேள்வி எழுப்பியுள்ளார் .

 

 

click me!