சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டாம் என பலரும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொர்பாக ட்விட்டரில், 'NoSir', 'NoModiNoTwitter' என்கிற ஹஸ்டேக்கள் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
பிரதமர் மோடி சமூக ஊடகங்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பலகோடி பேர் பின்தொடர செயல்படுகிறார். அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், முக்கிய நபர்களின் சந்திப்புகள், வெளிநாட்டு பயணங்கள் போன்றவற்றை உடனுக்குடன் தனது கணக்கில் படங்களுடன் பதிவிட்டு வருகிறார். அவரை ட்விட்டரில் 5.33 கோடி பேரும், முகநூலில் 4.4 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் பின் தொடா்ந்து வருகின்றனா்.
This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & YouTube. Will keep you all posted.
— Narendra Modi (@narendramodi)
undefined
இந்தநிலையில் நேற்று இரவு பிரதமர் மோடி அதிரடியாக ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், 'வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிடலாம் என்று யோசித்து வருகிறேன். இது தொடா்பான விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்’ என்று பதிவு செய்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதமரின் பதிவு வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு கிளம்பியது.
190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!
சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டாம் என பலரும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொர்பாக ட்விட்டரில், 'NoSir', 'NoModiNoTwitter' என்கிற ஹஸ்டேக்கள் ட்ரெண்ட் ஆகியுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரதமர் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் சமூக வலைதளங்களில் பயன்பாட்டை நிறுத்தினால் தாங்களும் அதை செய்யப்போவதாகவும் மோடியின் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே பிரதமரின் இப்பதிவு விமர்சனத்தில் இருந்தும் தப்பவில்லை. இது தொடா்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வெறுப்புணா்வை விட்டுவிடுங்கள்; சமூக வலைதளங்களை விட வேண்டாம்’ என்று பிரதமரிடம் கூறியுள்ளாா்.