PM CARE ல்இருந்து 3100 கோடி ரிலீஸ் செய்தது பிரதமர் அலுவலகம்.!!

By T BalamurukanFirst Published May 13, 2020, 11:34 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா கொடூரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற இந்திய அரசு மக்களிடம் கையேந்தி நிற்கிறது. அதற்காக புதிதாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பிரதமர் நிவாரண நிதிக்கு பணத்தை பெற்று வருகிறது பிரதமர் அலுவலகம்.
 
கொரோனா தடுப்பு பணிகளுக்காக  PMCARES  நிதியில் இருந்து ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ரூ.1000 கோடி புலம் பெயர் தொழிலாளர் நலனுக்காகவும்,  ரூ.100 கோடி தடுப்பூசி கண்டுபிடிக்கவும்,  ரூ.2 ஆயிரம் கோடி வென்டிலேட்டர் வாங்கவும் ஒதுக்கப்படும் என்று பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 27-ம்தேதி PM - CARES- மத்திய நிதி அமைச்சகத்தால்  உருவாக்கப்பட்டது.இந்த அமைப்புக்கு தனி நபர், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில்துறை குழுமங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து நிதி பெறப்படுகிறது. இந்த தொகைக்கு வரி கிடையாது.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, PM - CARES-க்கு நிதி வழங்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். இந்த அமைப்புக்கு நிதி தாருங்கள் என்று பத்திரிகை தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை ஏற்று பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்தனர்.  எனினும், ஏற்கனவே  கடந்த 1948 முதல்  பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும் போது, புதிதாக  PM -CARES- தேவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

click me!