மதுரையில் ரேசன் அரிசி கடத்தல் வைரலாகும் வீடியோ.! இரண்டு அமைச்சர்கள் இருக்கும் ஊரில் தை ரியமாக நடக்கும் கொள்ளை

By T BalamurukanFirst Published May 13, 2020, 10:57 PM IST
Highlights

கொரோனா நிவாரணமாக தமிழக அரசு இலவசமாக அரிசி பருப்பு ஆயில் ரேசன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. ஆனால் அரிசி பருப்பு ஆயில் பாக்கெட்களை ரேசன் கடை ஊழியர்கள் வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள் என்பது நீண்ட நாட்களாக நடக்கும் கடத்தல் கொள்ளை.

கொரோனா நிவாரணமாக தமிழக அரசு இலவசமாக அரிசி பருப்பு ஆயில் ரேசன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. ஆனால் அரிசி பருப்பு ஆயில் பாக்கெட்களை ரேசன் கடை ஊழியர்கள் வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள் என்பது நீண்ட நாட்களாக நடக்கும் கடத்தல் கொள்ளை. இதற்கு யாராலும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. காரணம் ரேசன் கடைகளை கண்காணிக்க வரும் பறக்கும் படை அதிகாரிகளின் கார் டிரைவர் வரைக்கும் கப்பம் கட்ட வேண்டியது இருக்கிறது ரேசன் கடை ஊழியர்கள். ரேசன் கடை ஊழியர்கள் மேல்மட்ட அதிகாரிகள் வரைக்கும் மாசம் மாசம் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

மதுரை அண்ணாநகரில் உள்ள ரேசன் கடையில் கடத்தப்படும் அரிசி.... pic.twitter.com/Zj0f0k8CyN

— Bala (@DevibalaSilk)

 

 

மத்திய அரசு ஏழைகளுக்காக மானிய விலையில் உணவு பொருள்களை மாநில அரசிற்கு வழங்கி வருகிறன்றது. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசி மனிதர்கள் சாப்பிட முடியாது என்பதற்கு அவர்கள் வழங்கும் அரிசியை சாட்சியாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வருவாய்துறை அமைச்சர் கூட்டுறவு துறை அமைச்சர் என இரண்டு பேர் இருக்கும் மதுரையில் இதுபோன்று நடைபெறுவது அபத்தமாக உள்ளது.இவர்கள் இருவரும் எந்த அளவிற்கு ரேசன் கடைகளில் மக்களுக்கு கிடைக்கும் பொருள்கள் மீது அக்கறை செலுத்தி வருகிறார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அரசு ரேசன்கடைகள் இலவசமாக அரிசி பருப்பு வழங்கி வருகின்றது. ஏப்ரல் மே ஜீன் மாதங்கள் வரை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ சொந்த ஊரிலேயே அரிசி கடத்தல் தலைவிரித்தாடுகிறது.பொதுமக்கள் ரேசன் கடைகளில் தேவைக்கு ஏற்ப அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பு ரேசன் அரிசி கடத்தலுக்கு வழிவகுத்துள்ளது.

மதுரை அண்ணாநகரில் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் அமைந்துள்ளது வருவாய்துறை சார்பில் இயங்கு ரேசன் கடை(BZ.003). இந்த கடை ஒரு சந்துக்குள் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இங்குள்ள ரேசன் கடையில் இருந்து அரிசி பருப்பு சீனி ஆயில் எல்லாம் தொடர்ந்து வெளிப்படையாகவே கடத்தப்பட்டு வருகின்றது. இந்த கடத்தலை அப்பகுதியில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலரான ஹக்கீம் பேசும் போது.." ரேசன் கடைகளில் அரிசி கடத்தல் என்பது தொடர்ந்து நடக்கிறது. இந்த அரிசி வெளிமார்க்கெட்டில் பட்டை தீட்டி பாலீஸ் செய்து ரூ35முதல்40 வரைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேசிய பேரிடர் காலத்திலும் கூட மனசாட்சி இல்லாதவர்கள் இது போன்ற கொள்ளைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள். கொரோனா மக்களை வீட்டிற்குள் முடக்கி வைத்திருக்கிறது. அரசாங்கம் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்கிறது. ஆனால் மக்களுக்கான உணவு பொருள் வெளி மார்க்கெட்டிற்கு கடத்தப்படுவது மட்டும் குறைய வில்லை. மக்கள் சாப்பிடும் அளவிற்கு தரமான அரிசியாக இருந்தால் மக்கள் எல்லோரும் ரேசன்கடைகளில் வாங்குவார்கள். இதுபோன்ற கடத்தலும் குறையும். அதற்கும் வாய்ப்பு இல்லாமல் தரமில்லாத அரிசிகள் வழங்குவதால் தான் இது போன்ற கடத்தல் சம்பவம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ரேசன் கடைகளில் அரிசி கடத்தல் என்பது பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. ஸ்மார்ட் கார்டு வந்தால் ஊழல் ஒழிந்து விடும் கடத்தல் இருக்காது என்று சொன்னவர்களுக்கு அண்ணாநகர் கடையில் அரிசி கடத்தப்படும் வீடியோ சாட்சியாக இருக்கிறது. என்கிறார்.

click me!