பிரதமர் வீட்டிற்காக 30,351 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்படும். அதோடு பிரதமருக்கு பாதுகாப்பு தரும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ரூ.2.5 ஏக்கர் நிலத்தில் கட்டிடம் கட்டப்படும்.
மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் 15 ஏக்கரில் 10 மாடி கட்டடங்களுடன் பிரதமருக்கு புதிய வீடு கட்டப்பட உள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.971 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் நிலையில், பிரதமர், துணை ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு புதிய வீடுகளும் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய பொதுப் பணித்துறை சில பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளது. இதன்படி, டெல்லியில் பிரதமருக்காக 15 ஏக்கரில் பிரமாண்டமான வீடு கட்டப்பட உள்ளது.
அதில், பத்து 4 மாடி கட்டிடங்கள் இருக்கும். பிரதமர் வீட்டிற்காக 30,351 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்படும். அதோடு பிரதமருக்கு பாதுகாப்பு தரும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ரூ.2.5 ஏக்கர் நிலத்தில் கட்டிடம் கட்டப்படும். பிரதமரின் அலுவலகமும் இதில் இயங்கும். இதே போல, துணை ஜனாதிபதிக்கும் 15 ஏக்கரில் புதிய வீடு கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 32 கட்டிடங்கள் அமைந்திருக்கும். பிரதமர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது இன்னும் முடிவாகவில்லை. இதற்கிடையே, மத்திய விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட ரூ.11,794 கோடி, தற்போது ரூ.13,450 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.