அவங்க கேட்ட நாங்க ஓகே சொல்லணும்மா? தமிழக அரசுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு...!

 
Published : Jan 24, 2018, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
அவங்க கேட்ட நாங்க ஓகே சொல்லணும்மா? தமிழக அரசுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு...!

சுருக்கம்

Prime Minister Rajiv Gandhi was murdered in 1991 by a bomb explosion near Chennai

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னை அருகே குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதில் நளினி, பேரறிவாளன்,சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்ச நீதிமன்றம். 

தமிழக அரசு முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய முடிவெடுத்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நகழை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது. 

ஆனால் மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசை எதிர்த்து மனு தாக்கல் செய்தது.

இதனிடையே பேரறிவாளன், தான் குற்றவாளி என நிரூபிக்கப்படாலேயே 27 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும் அதனால் குற்றவாளி என நிரூபிக்கும்வரையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் இதில் பதில் மனுத்தாக்கல் செய்தி சிபிஐ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!