பிரதமர் மோடியின் சூப்பர் அறிவிப்பு... தீபாவளி வரை இனி இலவசம்தான்..!

By Thiraviaraj RMFirst Published Jun 7, 2021, 5:55 PM IST
Highlights

நம் சக்தியை கொண்டு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சென்றோம்.

தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,  ``இந்தியாவில் ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேலும் மூன்று தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதுவும் விநியோகிக்கப்படும். 3 தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கின்றன. வரும் நாட்களில் கொரோனோ தடுப்பூசிகளை விநியோகம் செய்வது அதிகரிக்கப்படும். கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் தீரும்

.

விரைவில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன்பே தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றினார்கள் முன்கள பணியாளர்கள். 

உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத, மிகப்பெரிய அளவில் நோய் தொற்று உலக மக்களைப் பாதித்து வருகிறது. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாட்டில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததை கண்டோம். கொரோனா காரணமாக, நாட்டில் மருத்துவ வசதியை இன்னும் அதிகபடுத்தி இருக்கிறோம். நம் சக்தியை கொண்டு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சென்றோம்.தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்’’ என அவர் தெரிவித்தார். 

click me!