கொரோனா நமது மிகப்பெரிய எதிரி.. இதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.. பிரதமர் மோடி..!

By vinoth kumar  |  First Published Jun 7, 2021, 5:29 PM IST

முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்று வருகிறார். அப்போது, உலகத்தின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளின் இல்லாத மிகப் பெரும் நோய்த் தொற்று உலக மக்களை பாதித்து வருகிறது. கொரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்திருக்கிறோம். 

Tap to resize

Latest Videos

undefined

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு நாம் செய்திருக்கிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் மற்றும் விமானம் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை அவசரகதியில் எடுத்துச் செல்லும் வசதி பெற்றிருக்கிறோம். 

இந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றால் நாம் பல பாடங்களை கற்று வருகிறோம். மருத்துவமனைகளில் ஐசியூ படுக்கைகள் நிரம்பி வழியும் நிலையை கண்டுள்ளோம். கொரோனா தொற்றால் மருத்துவத் துறையில் அடிப்படை வசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம். கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். வரலாற்றில் இல்லாத அளவுக்கு தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். 

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான உயரிக்ளை காப்பாற்றி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம். கொரோனா நமது மிகப்பெரிய எதிரி. இதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்றார்.

click me!