அடி தூள்.. 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. வரவேற்க தயாராகும் தமிழக அரசு.

Published : May 23, 2022, 04:28 PM IST
 அடி தூள்.. 26 ஆம் தேதி  தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. வரவேற்க தயாராகும் தமிழக அரசு.

சுருக்கம்

தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக அரசு தயாராகிவருகிறது இதற்கான முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.  

தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக அரசு தயாராகிவருகிறது இதற்கான முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாக நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் பாராட்டும் பெற்று வரும் அதே நிலையில் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் சில திட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே நேரத்தில் பல்வேறு விவகாரங்களில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதுடன் அடிக்கடி அவரை சந்தித்து  திமுக அரசு மீது புகார் தெரிவித்து வருகிறார். மொத்தத்தில் பாஜகவுக்கு திமுக அரசுக்கும் இடையேயான உறவு மோதல் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.

இது ஒரு புறம் உள்ள நிலையில், பிரதமர் மோடி வரும் 26-ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னையில் பல்வேறு திட்டங்களை அவர் துவக்கி வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு உள்விளையாட்டு அரங்கில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதமர் மோடியின் வருகைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சராக வேலை என்று ஆய்வு செய்தார்.  அவருடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, பிரதமர் மோடி அமரும் மேடை, ஒலிபெருக்கிகள், ஒளி விளக்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான நிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தேன்.

பிரதமர் மோடி வருகை தந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 17,471 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் அவர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில் அவரும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நெடுஞ்சாலை துறை மற்றும் இந்திய ரயில்வே துறையும் இணைந்து திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்  என அமைச்சர் மேலும் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை