மே.28ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... அறிவித்தார் கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன்!!

Published : May 23, 2022, 03:03 PM IST
மே.28ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... அறிவித்தார் கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன்!!

சுருக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் மே 28 ஆம் தேதி அன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் மே 28 ஆம் தேதி அன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர் / பொறுப்பாளர்கள்கள் கூட்டம் வருகிற மே 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அப்போது மாவட்டக் கழகச் செயலாளர், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதுமட்டுமின்றி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதே 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை தான் சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துக்கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். இந்தச் சூழலில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள், உட்கட்சித் தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே 5க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மீது அவரவர் மாவட்டங்களில் இருந்து கட்டுக்கட்டாக வந்துள்ள புகார்கள் குறித்தும் அன்றைய தினம் விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு திமுக தலைமை சில அதிரடி மாற்றங்களை கட்சியில் அரங்கேற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது திமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சித் தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் நபர்களின் பட்டியல் மாவட்டம் வாரியாக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழாவுக்கு பிறகு குழப்பவாதிகள் வேற்றப்பட்டு புது முகங்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!