இனி திராவிட மாடல் கிடையாது, பாட்டாளி மாடல்தான்,! 2026ல் சந்திப்போம்.! அன்புமணி அட்டாக் பேச்சு!

By Raghupati R  |  First Published May 23, 2022, 2:50 PM IST

Anbumani Ramadoss :  திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். நாம் பாட்டாளி மாடல் எனக் கூறி வருகிறோம். தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை, தமிழகத்தை ஜார்கண்டோடு ஒப்பிடக்கூடாது. சிங்கப்பூருடன் தான் ஒப்பிட வேண்டும். 


திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருமுல்லைவாயலில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தின் முன்னேற்றம் தான் பாமகவின் இலக்காகும். அதிகாரம் இல்லாமலேயே தமிழகத்திற்கு பல முன்னேற்றங்களை செய்து வந்துள்ளோம். மேலும் நம்மிடம் அதிகாரம் இருந்தால் பல முன்னேற்றங்களை செய்து தர முடியும். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாமகவிடம் தீர்வு, செயல் திட்டங்கள் உள்ளன. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். வருகின்ற தலைமுறையை காக்க 2026-ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். நாம் பாட்டாளி மாடல் எனக் கூறி வருகிறோம். தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை, தமிழகத்தை ஜார்கண்டோடு ஒப்பிடக்கூடாது. சிங்கப்பூருடன் தான் ஒப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் இருக்கக்கூடாது என்பதே பாமகவின் கனவு. 

Tap to resize

Latest Videos

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். வேலையின்மையை ஒழிக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுதான் பாட்டாளி மாடல் ஆகும். தமிழக மக்கள் பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அதனை நாம் வாக்கு வங்கிகளாக மாற்ற வேண்டும். இந்தியாவை வழி நடத்துகிற அளவுக்கு பாமகவிடம் செயல்திட்டங்கள் உள்ளன. பாமகவிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால், தமிழகத்தில் 75 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்ற முடியும். 

ஏரிகளை மூடி குடியிருப்புகளை கட்டியது தான் திராவிட மாடலாகும். தொலைநோக்குப் பார்வை திராவிட கட்சிகளிடம் இல்லை. சென்னையை சுற்றி 10 புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். திராவிட கட்சிகளிடம் பணம் உள்ளது. நம்மிடம் உழைப்பு உள்ளது. 2026-ல் உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். பாமக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும்’ என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்துக் கணிப்பில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல் ! அப்போ இவருதானா ?

இதையும் படிங்க : முதல்வர் மு.க ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடு எப்படி? கருத்து கணிப்பில் வெளியான தகவல் !

click me!