உங்கள் உயிர்தான் எனக்கு முக்கியம்..!! உள்ளம் உறுகி மக்களுக்காக மக்களிடம் மன்றாடிய மோடி..!!

Published : Mar 24, 2020, 09:21 PM ISTUpdated : Mar 24, 2020, 09:24 PM IST
உங்கள் உயிர்தான் எனக்கு முக்கியம்..!!  உள்ளம் உறுகி மக்களுக்காக மக்களிடம் மன்றாடிய மோடி..!!

சுருக்கம்

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்படும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.    

தேசிய அளவிலான ஊரடங்கு இன்று இரவு 12 மணி முதல் அடுத்து வரும் 21 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என இந்திய பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இன்று மாலை 8 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் அப்போது தேசிய ஊரடங்கு உத்தரவை அவர் அறிவித்தார் தொடர்ந்து பேசிய அவர்  நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. 

21 நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி விடுவோம்  உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்  மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.- ஊடகத் துறையினர், காவல் துறையினர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர் அவர்களுக்கு எனது நன்றி,  அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்படும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொள்கிறேன். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம். வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்- என அவர் தெரிவித்துள்ளார்.  அப்போது பேசிய அவர் அரசு சொல்வதை தயவு செய்து கேளுங்கள் என கையொடுத்து கும்பிட்டார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது .

PREV
click me!

Recommended Stories

தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..
நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!