4 ஆண்டுகளில் 77 வெளிநாட்டு பயணங்கள்…. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வந்தது வெறும் 19 நாட்கள்தான்….

 
Published : Jun 14, 2018, 07:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
4 ஆண்டுகளில் 77 வெளிநாட்டு பயணங்கள்…. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வந்தது வெறும் 19 நாட்கள்தான்….

சுருக்கம்

prime minister modi forign trip aam athmi

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 4 ஆண்டு பதவிக்காலத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் சென்றிருப்பதாகவும், மிக அதிகமான நாட்களை அவர், வெளிநாட்டிலேயே கழித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். அதில் பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார் என அதில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் என்ற அளவிலேயே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.நாடாளுமன்றம் வந்த நாட்களிலும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலேயே இருந்துள்ளார். பேசிய நில நாட்களிலும்  அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இரண்டுமுறை முன்னாள் பிரதமர் நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டுமுறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார்.

இதைத்தாண்டி நாடாளுமன்ற விவாதங்களில் என்று அவர் பங்கேற்றது 4 முறைதான்.மோடி இந்த நான்கு ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்து பேசியுள்ளார். எல்லா வாரமும் வானொலி மூலம் , மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒருமுறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார்.

ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதனைப் பற்றியும் அவர் பேசவே இல்லை.மக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஜிஎஸ்டி, மதவெறி பிரச்சனை, சாதியப் படுகொலை, வங்கிகள் செய்யும் மோசடிகள் என எதிலும் பிரதமர் பேசவில்லை.

கூடுதல் தகவலாக, பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் அதிக நாட்களை நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் கழித்துள்ளார்’ என்று சஞ்சய் சிங் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர்களிலேயே மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்றால் அவர் மோடிதான். நாடாளுமன்றத்தில் பேசாத அவர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது சத்தம்போட்டு பேசுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார். அதாவது எங்கு கேள்வி கேட்கமாட்டார்களோ அங்கு மட்டுமே மோடி பேசி வருகிறார். நாடாளுமன்றத்திற்கு 19 முறை மட்டுமே சென்றுள்ள மோடி, கடந்த 4 ஆண்டுகளில் 77 வெளிநாட்டுப் பயணங்களை முடித்து விட்டார் என்று தனது மனுவில் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்..

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!