இன்று பரபர தீர்ப்பு…. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு….தப்புமா எடப்பாடி அரசு ?

 
Published : Jun 14, 2018, 06:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இன்று பரபர தீர்ப்பு…. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு….தப்புமா எடப்பாடி அரசு ?

சுருக்கம்

TTV Dinakaran support 18 mls case today judgement in chennai HC

டி.டி.வி.தினகரன் ஆதரவு  18 எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லுமா ? செல்லாதா ?  என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

ஜெயலலிதா மரணத்துக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு காரணமாக முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து  சசிகலா அணியில் இருந்த பழனிசாமி, முதலமைச்சராக  நியமிக்கப்பட்டார்.

ஆனால் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டபின்னர் எதிர் அணியில் இருந்த ஓபிஎஸ்ம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக இணைந்தனர். ஓபிஎஸ் துணை முதலமைச்சராகக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள்  அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து, சசிகலாவை நீக்கினர்.

இந்நிலையில், சசிகலா  ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமிக்கு எதிராக, கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கடந்த, ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தனபால் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். 

இதையடுத்து 18 தொகுதிகளும் காலியானதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த, நீதிபதி துரைசாமி, 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பை வெளியிட, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தார்.

இதைத் தொடர்ந்து 18 எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்நதனர். இந்த  மனுக்கள், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. வழக்கை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, அந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. 

எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், அபிஷேக் சிங்வி, பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் ஆகியோரும், சபாநாயகர், சட்ட சபை செயலர், கொறடா, முதலமைச்சர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள், அரிமா சுந்தரம், முகுல்ரோஹத்கி, வைத்தியநாதன் ஆகியோரும் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களும், 2018 ஜன., 23ல் முடிந்தன. வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், முதல் பெஞ்ச் தள்ளி வைத்திருந்தது. இதையடுத்து, இவ்வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்தது.

ஒரு கட்டத்தில், தலைமை நீதிபதி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், தகுதி நீக்க வழக்கில், தீர்ப்பை விரைந்து அளிக்க கோரி முறையிடப்பட்டது. அதற்கு, தலைமை நீதிபதி, 'தீர்ப்பு விரைவில் வரும்' என்றார்.
கோடை விடுமுறைக்கு பின் கடந்த  4ம் தேதி, உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. தலைமை நீதிபதியுடன் அமர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, எம்.சுந்தர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்குகளை விசாரித்து வருகிறார். நேற்று அவர், மதுரையில் இருந்து சென்னை புறப்பட்டார்.

அதனால், இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளிவரும் என்ற, எதிர்பார்ப்பு கூடியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், இன்று மதியம், 1:00 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

 சட்டசபையில், முதலமைச்சர்  மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்த, ஓபிஎஸ் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., கொறடா சக்கரபாணி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தொடர்ந்த வழக்கை, ஏற்கனவே, தலைமை நீதிபதி அடங்கிய, முதல் பெஞ்ச் நிராகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தீர்ப்பில், மூன்று விதமான உத்தரவுகள் வர வாய்ப்பு உள்ளது. சபாநாயகரின் உத்தரவு செல்லாது அல்லது சபாநாயகரின் உத்தரவு செல்லும் என, தீர்ப்பு வரலாம். அல்லது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவை பிறப்பிக்கலாம். அவ்வாறு பிறப்பித்தால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்லும். எப்படி இருந்தாலும், பாதிக்கப்படுவோர், உச்ச நீதிமன்றம் வரை செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருகிறது இன்று பிற்பகல் 1 மணியை….

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!