பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் ரூ16 ஆயிரம் கோடி.. மொத்த ஏர்இந்தியாவும் ரூ18 ஆயிரம் கோடியா.? பிரியங்கா ஆவேசம்!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 8:55 PM IST
Highlights

லக்கீம்பூர் விவகாரத்தில் குற்றவாளிகளை அமைச்சரை பிரதமர் மோடியும் உ..பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  குற்றம் சாட்டியுள்ளார்.
 

லக்கீம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்  ஆசிஷ் மிஸ்ரா சிக்கியிருக்கிறார். இந்த விவகாரம் பெரிதான நிலையில், மத்திய அமைச்சரின் மகனை பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தைக் கண்டித்து பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.


அப்போது, “லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.  ஆனால், பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவரை பாதுகாக்கிறார்கள். லக்னோவுக்கு வர முடிந்த பிரதமர் மோடிக்கு, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற லக்கீம்பூர்  செல்ல முடியவில்லை.

 
பிரதமர் நரேந்திர மோடி தான் பயணிப்பதற்காக இரண்டு விமானங்களை ரூ. 16 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆனால், மொத்த ஏர் இந்தியாவையும் வெறும் ரூ. 18 ஆயிரம் கோடிக்கு விற்றுள்ளார். ஏர் இந்தியாவை மத்திய அரசு விற்றதை கண்டிக்கிறேன்.” என்று பிரியங்கா காந்தி பேசினார். 
 

click me!