காலையில் பிரதமர் மோடி பாராட்டு.!மாலை சலூன் கடைக்காரர் குடும்பத்தோடுபாஜகவில்இணைப்பு.! அதிரடி காட்டிய பாஜக!

By T BalamurukanFirst Published May 31, 2020, 9:51 PM IST
Highlights

வழக்கம் போல் மக்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவதுண்டு.அந்த வகையில் பிரதமர் மோடி மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் கொரோனா ஊரடங்கில் உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு உணவு பொருள் வழங்கியதற்கு மனநெகிழ்ச்சியோடு வாழ்த்துசொன்னார் மோடி.மாலையில் சலூன் கடைக்காரர் மோகன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தார்.

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். இவர் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமம். சொந்த ஊரில் இருந்து வரும் போது ஒன்றும் கொண்டுவரவில்லை. எல்லாமே மதுரை மண்ணில் நான் சம்பாதித்தது. ஆகவே மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது ஏதாவது உதவி செய்ய வேண்டி திட்டமிட்ட போது என் மகள் நேத்ரா படிப்புக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து உதவி செய்தேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. செய்தியை படித்தவர்கள் தங்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள். இதையறிந்த நடிகர் பார்த்தீபன் அவரது மகள் நேத்ரா படிப்பு செலவை ஏற்றுக்கொண்டார்.

இன்று காலையில் பிரதமர் மோடி அந்த குடும்பத்தினரை வாழ்த்தி புகழ்ந்து பேசினார்.இந்த சந்தோசத்தில் இருந்த மோகன் குடும்பத்தினர் மாலையில் பாஜகவில் இணைந்ததாக செய்தி வெளியானது. மதுரைமாவட்ட தலைவர் ஹரிஹகரன் முன்னிலையில் மோகன் குடும்பத்தினர் பாஜகவில் இணைந்தனர். இவர்களுக்கு பாஜக மாநில தலைவர் முருகன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

click me!