நெருக்கும் 2ஜி வழக்கு... கலக்கத்தில் ஆ.ராஜா- கனிமொழி... இன்று முக்கியத் தீர்ப்பு..!

Published : Sep 29, 2020, 10:25 AM IST
நெருக்கும் 2ஜி வழக்கு... கலக்கத்தில் ஆ.ராஜா- கனிமொழி... இன்று முக்கியத் தீர்ப்பு..!

சுருக்கம்

இந்த வழக்கில் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் அரசியல் ரீதியாக அது திமுகவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதனால் திமுகவினர் பீதியில் உள்ளனர்.  

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு விடுவித்ததை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என இரு அமைப்புகளும் மனு தொடர்ந்திருந்தனர். இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வாதத்திற்கு எதிர் மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கில் திமுகவைச் சேர்ந்த கனிமொழியும், அ.ராசாவும் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும், அமலாக்க பிரிவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்தமுறை குற்றம்சாட்டப்பட்ட இருவரும் எளிதில் தப்பிவி டாதபடி சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் மிக தீவிரமாக இந்த வழக்கை கையாண்டு வருகின்றன.  வழக்கு தொடர்பான சிறிய ஆவணங்களைக் கூட விட்டுவிடாமல் அனைத்தையும் மொத்தமாக திரட்டி நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல இரு மத்திய அமைப்புகளுமே தயார் நிலையில் உள்ளன.

இந்த வழக்கில் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் அரசியல் ரீதியாக அது திமுகவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதனால் திமுகவினர் பீதியில் உள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?