குடியரசுத்தலைவர் ஆட்சியை பரிந்துரைங்க... அதிமுக கொறடா அறிக்கையால் முதல்வர் அதிர்ச்சி...!

By vinoth kumarFirst Published Jan 5, 2020, 10:39 AM IST
Highlights

கடுமையான நெருக்கடி சூழ்நிலை உருவாகியுள்ளதால் உடனே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்ய வேண்டும் என அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார். 

கடுமையான நெருக்கடி சூழ்நிலை உருவாகியுள்ளதால் உடனே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்ய வேண்டும் என அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;- முதல்வர், அமைச்சர்கள், வாரிய தலைவர்கள், அரசு செயலர், இயக்குனரின் வாகனங்கள் அரசுத்துறை வாகனங்களுக்கு டீசல் வாங்கிய தொகையை கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு செலுத்தவில்லை. இதனால், அரசுத்துறை வாகனங்களுக்கு டீசல் வழங்க முடியாது என அமுதசுரபி அறிவித்துள்ளது. 

இது, புதுச்சேரி அரசு நிர்வாக சீர்கேட்டின் உச்சக்கட்டம். கல்வித்துறை அமைச்சர் தனது காருக்கு டீசல் வழங்காததால் அரசு பேரு்தில் பயணம் செய்துள்ளார். இதைவிட சீரழிந்த அரசு வேறு எதுவும் இருக்க முடியாது. சிறந்த நிர்வாகம் என பேசும் முதல்வர் நாராயணசாமி ஏன் கூட்டுறவு நிறுவனங்களிடம் பெற்ற டீசலுக்கான தொகையை செலுத்தவில்லை? ஆட்சியில் உள்ளவர்களே இவ்வாறு நடந்து கொண்டால் கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்திற்கு செல்லாமல், லாபத்தை நோக்கியா செல்லும்? ஆம்புலன்சிற்கு கூட டீசல் வழங்க முடியாத அவல நிலைக்கு யார் காரணம்? இவை அனைத்திற்கும் நிதி இல்லை, வாய் ஜம்பம் இனியும் மக்களிடம் பலிக்காது. 

புதுச்சேரியில் கடுமையான நெருக்கடி சூழ்நிலை உருவாகியுள்ளதால் உடனே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

click me!