நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முடக்கவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்...? – எம்பி, எம்எல்ஏக்களுக்கு சூடு வைத்த ஜனாதிபதி

 
Published : Mar 03, 2017, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முடக்கவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்...? – எம்பி, எம்எல்ஏக்களுக்கு சூடு வைத்த ஜனாதிபதி

சுருக்கம்

legislation to Parliament battlefield as people chose to janapatipati Pranab Mukherjee MP and MLAs spoke advising

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தை போர்க்களமாக மாற்றுவதற்காகவா உங்களை, மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என ஜனபதிபதி பிரணாப் முகர்ஜி, எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தி பேசினார்.

ராணுவத்துறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடந்தது.

இதில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு, ராணுவத்துறையினருக்கு விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது இந்திய நாட்டில் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை, சிவப்பு கம்பளம் விரித்து யாரும் அழைப்பதில்லை. மக்களின் மனதில் எண்ண தோன்றுகிறதோ அதன்படி, அவர்கள் சார்பாக தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்கவே, பிரதிநிதிகளாக உங்களை தேர்வு செய்து அனுப்புகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு தேர்தலிலும், நீங்கள், மக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறீர்கள். அதை யாரும் மறக்க கூடாது. மக்கள் ஆதரவு தெரிவிப்பதால், நீங்கள் எம்எல்ஏ, எம்பி என கூற முடிகிறது. இதனை உங்கள் பதவி காலம் முடியும் வரை, மறக்காமல் இருக்க வேண்டும். மக்களின் சேவையே தங்களது கடமையாக நினைக்க வேண்டும்.

குறிப்பாக, சட்டங்கள் இயற்றப்படும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பேரவைகள் போர்க்களமாக மாறி வருகிறது. இதுபோன்ற செயல்களை செய்வதற்காகவா, மக்கள் உங்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள்.

நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ உங்களது போர்க்களத்தால் முடக்கப்படுவதால்  ஒட்டுமொத்த நாட்டையும் முடக்கிவிடும் என்பதை எம்பிக்களும், எம்எல்ஏக்களும் நினைவில் கொள்ள வேண்டும். நம் நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் பிரதிநிதியான உங்கள் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்கு, மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு