
பிரதமர் மோடியின் முகத்துக்கு எப்போதும் அந்த வெள்ளை நிற தாடிதான் அழகு. அந்த தாடி அவருக்கு ஒரு கம்பீரத்தைத் தரும். அதனை ட்ரிம் பண்ணி அழகாக வைத்திருப்பதில் அதிக கவனமாக இருப்பார் மோடி என பாஜக தலைவர்கள் சொல்வது உண்டு. ஆனால், சமீபகாலமாக அவரது முகத்தில் நீண்டு வளர்ந்தது வெள்ளை நிர தாடி. ட்ரிம் பண்ணி நீளத்தை குறைக்காமல் அவர் வைத்திருப்பதைக் கண்டு தமிழக பாஜகவினர் வியப்பாக பேசிக் கொண்டார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியை மோடி ட்ரிம் செய்யவில்லை. கொரோனா தொற்று துவங்கியதும் தாடியை, 'ட்ரிம்' செய்வதை நிறுத்தி விட்டார்.நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்த்தது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக என சொல்லப்பட்டது. ஏன் இத்தனை நாட்கள் தாடி வளர்த்தார் மோடி..? பிரதமர் வீட்டில் அனைத்து வசதிகளும் உண்டு. மோடிக்கு முடி திருத்தம் செய்வதற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள், பிரதமர் வீட்டிலேயே இருக்கின்றனர். கொரோனாவிலிருந்து பிரதமரைப் பாதுகாக்க, முடி திருத்துபவர்களை, பிரதமரை நெருங்க அனுமதி அளிக்கவில்லை, பாதுகாப்பு அதிகாரிகள். கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன.
அடுத்து மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடந்தது. நம் தேசியக் கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இதனால், ரவீந்திரநாத் தாகூர் போல், நீண்ட தாடியுடன் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காகவே, மோடி, இப்படி தாடி வளர்க்கிறார் என அப்போது பேசப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், இப்போது தாடியை, 'ட்ரிம்' செய்துள்ளார் மோடி.
பெரியார், மோடி இருவருக்கும் ஒரே நாள் பிறந்த தினம். ஆகையால் மோடியும் தாடி வைத்துள்ளார் எனவும் கூட பேச்சுக்கள் எழுந்தது.