அவ்வளவு தான் தம்பி... சுதீஷிடம் சுடு சொற்களை வீசிய முதல்வர்... கூட்டணி முறிவு பற்றி பிரேமலதா பகீர்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 15, 2021, 2:25 PM IST
Highlights

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் போது கூட எங்களால் இவ்வளவு தான் தம்பி கொடுக்க முடியும் பார்த்துக்கோங்க என முதலமைச்சர் சொன்னார்.

அதிமுக கூட்டணியில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக திடீரென கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதிமுக நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும் கூட்டணி முறிவு குறித்த காரணங்கள் வெளிப்படையாக தெரியாமல் இருந்தன. முதல் 40 தொகுதிகள் வரை கேட்ட தேமுதிக மெல்ல இறங்கி வந்து அதிமுகவிடம் பாமகவிற்கு கொடுத்தது போல் 23 தொகுதிகளாவது வேண்டும் என கேட்டதாகவும் அதற்கும் சம்மதிக்காததால் தான் கூட்டணியை விட்டு விலகியதாகவும் கூறப்பட்டது. 

தற்போது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுகவுடான கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா ரகசிய பேச்சுவார்த்தையில் நடந்த பல விஷயங்களை ஓபனாக பேசியுள்ளார். 

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் மீண்டும் வெற்றி பெற வேண்டு என மிகவும் பொறுமையுடன் காத்திருந்தோம். கடைசியாக 18 எம்.எல்.ஏ.க்கள் சீட், ஒரு ராஜ்யசபா தொகுதி தேவை என கேட்டோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி 13 என்ற எண்ணில் இருந்து ஒன்றை கூட ஏற்ற மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். அப்படி என்றால் கேப்டன் ஒத்துக்கமாட்டாரு அண்ணா... என சுதீஷ் எடுத்துக்கூறினார். அப்போதும் அவர்கள் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. இறுதியாக அதையும் ஒப்புக்கொண்டு எங்களுக்கான தொகுதிகள் என்ன என்பதையாவது முதலில் கூறுங்கள் என நாங்கள் கேட்டோம். அதற்கும் அதிமுக ஒப்புக்கொள்ளவில்லை. 

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் போது கூட எங்களால் இவ்வளவு தான் தம்பி கொடுக்க முடியும் பார்த்துக்கோங்க என முதலமைச்சர் சொன்னார். அதற்கு சுதீஷ் அப்போ கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேற வேண்டி இருக்கும் அண்ணா என சொல்லியிருக்கிறார். அதற்கு ‘இதுக்கு மேல உங்க பிரியம் பார்த்துக்கோங்க’ என மிகவும் வேண்டா வெறுப்பாக முதலமைச்சர் பதிலளித்தார். அதற்கு பிறகு அந்த கூட்டணியில் தொடருவது எங்களுக்கு கடினமாக இருந்தது. அதனால் தான் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி இறுதியாக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தார். மாவட்ட செயலாளர்களும் 13 தொகுதிகளுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் என தெரிவித்துள்ளார். 
 

click me!