தமிழக அமைச்சர்களுக்கு பிரேமலதா விஜயகாந்தின் அசத்தல் கேள்வி..!

 
Published : Oct 12, 2017, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
தமிழக அமைச்சர்களுக்கு பிரேமலதா விஜயகாந்தின் அசத்தல் கேள்வி..!

சுருக்கம்

premalatha vijayakanth attacks ministers

டெங்கு ஒழிப்பு பணியில் மக்களின் பங்கு அவசியம் என கூறும் அமைச்சர்கள் ஊழல் செய்து சம்பாதித்ததில் மக்களுக்கு பங்கு கொடுத்தனரா? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தே.மு.தி.க கட்சியினர் நேரில் சென்று உதவிகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று டெங்கு நோயாளிகளை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

விஜயகாந்தின் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு நோயாளிகளை பார்வையிட, கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரேமலதா விஜயகாந்திற்கு முதலில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து பிரேமலதாவிற்கு மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறகு டெங்கு நோயாளிகளைப் பார்த்து பிரேமலதா ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், உட்கட்சிப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதிலும் பதவியை தக்கவைப்பதிலுமே குறியாக இருக்கும் ஆட்சியாளர்கள், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என குற்றம்சாட்டினார்.

தமிழக மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்திலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையிலும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது. டெங்கு உயிரிழப்பு தொடர்பாக தவறான புள்ளிவிவரங்களை அரசு தருவதாக பிரேமலதா குற்றம்சாட்டினார்.

மேலும் டெங்குவைத் தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் டெங்குவைத் தடுக்க மக்களின் பங்கும் அவசியம் எனவும் கூறும் அமைச்சர்கள் ஊழல் செய்து சேர்க்கும் சொத்துக்களில் மக்களுக்கு பங்கு அளிக்கின்றனரா? என கேள்வி எழுப்பினார்.
 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..