பிரதமர் மோடியை சந்தித்தார் ஓபிஎஸ் !!  இரட்டை இலை சின்னம் குறித்து பேசினார்களா ?

 
Published : Oct 12, 2017, 11:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
பிரதமர் மோடியை சந்தித்தார் ஓபிஎஸ் !!  இரட்டை இலை சின்னம் குறித்து பேசினார்களா ?

சுருக்கம்

modi OPS meet in delhi

துணை முதமைச்சரும் ,  அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன் உள்ளிட்டோர்  டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற  விசாரணையில் ஆஜராவதற்காக கடந்த 6-ம் தேதி ஓபிஎஸ்  உள்ளிட்டோர் டெல்லி சென்றிருந்தனர்.

அப்போது பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், மோடிக்கு வேறு அவசர பணிகள் இருந்ததால் அன்று சந்திப்பு நிகழவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து    ஓபிஎஸ் குழுவினர்  பிரதமர் நரேந்திர மோடியை இன்று  அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது  தமிழக அரசியல் நிலவரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கு  போன்றவை குறித்து  மோடியுடன்  ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

பிதரமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்,  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் அவர்கள் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..