ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும்..! மீடூ குறித்து அதிரடி கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்!

By manimegalai a  |  First Published Oct 21, 2018, 3:11 PM IST

#MeToo இயக்கம் இந்திய அளவில் பெரும் சூடு பிடித்துள்ளது, இதில்  பெரிய பிரபலங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரையிலும், எங்கோ அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களும் தாங்கள்... ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சிலரால் எவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோம் என மீடூ என பதிவிட்டு, வெளியுலகிற்கு தைரியமாக சொல்ல துணிந்துள்ளனர்.
 


#MeToo இயக்கம் இந்திய அளவில் பெரும் சூடு பிடித்துள்ளது, இதில்  பெரிய பிரபலங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரையிலும், எங்கோ அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களும் தாங்கள்... ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சிலரால் எவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோம் என மீடூ என பதிவிட்டு, வெளியுலகிற்கு தைரியமாக சொல்ல துணிந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இப்படி பாதிக்கப்படும் பெண்கள் தற்போது தங்களுடைய மன குமுறல்களை இப்போது கொட்டி தீர்த்தாலும், ஏன் அப்போதே நீங்கள் இது குறித்து பேசவில்லை, போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க வில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் இது குறித்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் முதல், பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளங்கள் மற்றும் பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், தேமுதிக கட்சியின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள, நடிகை விஜயத்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மீடூ சர்ச்சை குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்...மீடூ  தற்போது மிகப்பிரபலமாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பை கொடுத்து வருவதால்... இந்த இயக்கத்தை பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது'' என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த  பின்னர் செய்தியாளர்களை சத்தித்த பிரேமலதா... மீடூ சர்ச்சை குறித்தும் கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் பேசினார். 

அப்போது இந்த இயக்கத்தை பெண்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். சர்ச்சைகளுக்காகப் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் எப்போதும் பெண்கள் ஒன்றை மற்றும் கவனத்தில் கொள்ளவேண்டும். எப்போதும் அவர்கள் தைரியமாக இருந்தால் அவர்களை யாராலும் எதுவும் செய்யமுடியாது 
 ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். இதனால் பெண்கள் சரியாக இருக்க வேண்டும்''  என தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.

இவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதள வாசிகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 

click me!